Sunday, March 14, 2010

மேய்ப்பன்

கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
சங்கீதம்-78:71
ஆடுகளின் பின்னாகத் திரிந்த தாவீதை தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலை மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார் என பார்கிறோம்
இந்த மேய்ப்பன் சங்கீதம் 23 ம் அதிகாரத்தில் கூறுகிறான்

1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.

ஆம் கர்த்தர் அவனுடைய மேய்ப்பனாக இருந்தபடியால் அவன் தாழ்ச்சியடையவில்லை என பார்க்கிறோம். ஆம் இந்த நாட்களிலே கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் நாமும் இதே போல சொல்ல முடியும். கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்என்று.
கர்த்தர் நம்முடைய மேய்ப்பனாக இருந்தால் அவர் நம்மை எப்படி மேய்ப்பர் என்பதை இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறுகிறான்
பாருங்கள் அவர் நம்மை புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் கொண்டுபோய் விடுகிறார். அவர் நம் ஆத்துமாவைத் தேற்றி நம்மை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
அவர் நம்மோடு கூட இருக்கிறார். நம்முடைய சத்துருக்களுக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துகிறார், நம்முடைய ஜீவனுள்ள நாளெல்லாம் நம்மை பாதுகாக்கிறார். கர்த்தர் நம் மேய்ப்பனாக இருந்தால் இவிதமாக பல ஆசிர்வதங்களை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதே சமயத்தில் மேய்ப்பன் என்று சொல்லுகின்ற சில ஓநாய்களுக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாய் இருக்க திருமறையில் கூறப்பட்டுள்ள சில மேய்ப்பர்களை நாம் இங்கே பார்க்கலாம்
முதலாவது ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை பார்க்கும்போது இங்கே ஒரு மேய்ப்பனை பற்றி கூறப்பட்டுள்ளது.

பகுத்தறிவில்லாத மேய்ப்பர்
இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களை பற்றி ஏசாயா தீர்க்கதரிசி கூறுகிறார் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவை நோக்கிக்கொண்டிருக்கிற திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்என்று
ஏசாயா 56 ம் அதிகாரம் 11 ம் வசனத்தை படிக்கும்போது இவ்விதமாக கூறுகிறார்

11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

ஆம் இப்படிப்பட்ட பகுத்தறிவில்லாத மேய்ப்பர்களுக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

Thursday, February 4, 2010

A carrot and an egg to examine……..

A student complained to his learned teacher about the difficulties he has to endure in his life. He came from a very poor family and had to look after his home and support his aged and sick parents and his younger siblings by working hard every day after the classes in school while his wealthy class-mates could play and rest without any stress or strain. He was almost exhausted and had even thought about committing suicide.
The wise teacher gave him a carrot and an egg to examine. He was asked to comment on their hardness. He said that the carrot was sufficiently hard that it cannot be crushed by hands. The egg could be easily cracked and the liquid contents would leak out with ease. Then the teacher put the carrot and egg together in a pan, added some water to cover the articles and then boiled the water over the flame. After some time, the teacher took out the articles from the pan and asked for the comments of the student. The boy observed that the carrot, which was hard earlier, had become very soft after boiling. The egg, on the other hand, became very hard during the boiling. Its contents had solidified and now would not flow out even when the shell is shattered. The teacher told the boy, “Earlier, you were like the carrot. Your courage and strength of mind were lost when you were exposed to the hard realities of life. You became weak and could be smashed easily.” Next, he displayed the egg and told, “Be like the egg. You are soft and tender by nature, but the adversities of life should make you bolder and stronger. Then you can gain the courage to face any harsh moments with confidence.” He then narrated the biography of successful persons who could overcome the hard times of early life with confidence and earnest efforts.
Bible tells in John 12:24, a grain of wheat remains no more than a single grain unless it is dropped into the ground and dies. If it does die, then it produces many grains”

Wednesday, February 3, 2010

சங்கீதம் 86 அதிகாரம்

This is one My Favorite Psalm.....

Here for you!!!!!

1. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.

2. என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.

3. ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.

4. உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

5. ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

6. கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.

7. நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.

8. ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

9. ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

10. தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.

11. கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.

12. என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.

13. நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

14. தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.

15. ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.

16. என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.

17. கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும்.

Tuesday, February 2, 2010

மனம் விட்டுப் பேசுதல்

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்றுபோகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்துவிடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன.

என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப்போக வேண்டியதாகி விடுகின்றது. அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி.இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள். போர் முடிந்து உயிரோடுதிரும்புவது நிச்சயமில்லையல்லவா?

ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான். விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும்அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக்கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவிகண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும்மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன்ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார். படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான்என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர்மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளைஅவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன்மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்துதற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும்போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின்நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்டபோது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள்இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையேதந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்துபோகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம். மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம்கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால்அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன்மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாகமுடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான். மனைவியாவது ஏன்இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்லவற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக்கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம்விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம்.சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனைதப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவதுஉறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத்தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாகஅனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்துகொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப்புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும்சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும்காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம்.அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்துஅவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோவாய்ப்புகள் உள்ளன அல்லவா? இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ளவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயேசாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல்அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்துபிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் இந்ததாரக மந்திரத்தை மறந்து விடாமல் கடைபிடியுங்கள்- வாய் விட்டுப்கேளுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள்.

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு, இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்!!